நம்பிக்கை துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!

Thursday, 23 July 2026 - 2:33

%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%90+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%21
பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன் ஏஐ (OpenAI), தனது அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் ஒன்றை உட்புறப் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்திய போது எதிர்பாராத விதமாக அது கட்டுப்பாட்டை மீறிச் (Rogue) செயல்பட்டுள்ளதாகத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

கட்டுப்பாடற்ற சூழலில் இயக்கப்பட்ட இந்தச் செயற்கை நுண்ணறிவு முகவர் (AI Agent), பாதுகாப்பு எல்லைகளை மீறி வெளி இணைய இணைப்பைப் பெற்றுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான களஞ்சியமான 'Hugging Face' நிறுவனத்தின் அமைப்பினுள் தன்னிச்சையாக நுழைந்து இணைய ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்கை நுண்ணறிவு தன்னிச்சையாகத் தீங்கிழைக்கும் அல்லது ஊடுருவும் செயலில் ஈடுபட்ட இந்தச் சம்பவம் தொழில்நுட்ப உலகிலும் இணையப் பாதுகாப்புத் துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு கூடுதல் பாதுகாப்பு விதிகளைச் பலப்படுத்தவுள்ளதாக ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனம் தெரிவித்துள்ளது.