24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள் - இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி புதிய சாதனை

Saturday, 25 July 2026 - 15:18

24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+303+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
இந்தியாவில் நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக, புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், மாணவர்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் செல்ஃபி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிரதமர் வெளியிட்ட ரீல்ஸ் காணொளி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளாவிய சாதனையை முறியடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பிற்கும் இளைஞர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி "நன்றி நண்பர்களே" என்ற தலைப்பில் மற்றொரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

அதில், இளைஞர்களுடனான இந்த நேர்மறையான உரையாடலும் பிணைப்பும் மேலும் வலுவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.