வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

Wednesday, 12 August 2026 - 10:35

%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%27+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+3+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
இந்தியாவில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையிலான சட்டமூலத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பது குற்றமாக கருதப்படுவதுடன், அதற்காக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கௌரவச் சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், தேசிய கீதத்தை உள்நோக்கத்துடன் பாடுவதைத் தடுப்பது அல்லது பொது நிகழ்வில் பாடும்போது இடையூறு ஏற்படுத்துவதும் குற்றமாகக் கருதப்படுகிறது.

அத்துடன், இரண்டாவது அல்லது அதற்குப் பின்னரான குற்ற நிரூபணங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.