ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவுனர் அபிஜீத் திப்கே அறிவிப்பு!

Thursday, 13 August 2026 - 4:15

%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அடுத்தகட்டப் போராட்டமான "ஜந்தர் மந்தர் சீசன் 2" விரைவில் தொடங்கப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவுனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கோரிக்கைகளை ஏற்று, டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட போராட்டம் தொடங்கப்படவுள்ளதாக டெல்லி நரைனா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அபிஜீத் திப்கே தெரிவித்தார்.

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த மண்டப உரிமையாளர்கள், மத்திய ஆளுங்கட்சியின் (பாஜக) மிரட்டல் மற்றும் அழுத்தம் காரணமாக கடைசி நிமிடத்தில் முன்பதிவை ரத்து செய்ததாக அபிஜீத் திப்கே குற்றம் சாட்டினார்.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் கிராமப்புற அரசுப் பாடசாலைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தக் கோரி 'ஸ்கூல் தீக் கரோ' (School Thik Karo) என்ற புதிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.