தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் நகர்வுகள் மற்றும் கருத்துகள் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது இது குறித்துப் பேசிய டிடிவி தினகரன், திரையில் கதாநாயகனாகப் பார்த்த விஜயை தற்போது தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது முற்றிலும் மாறுபட்ட உணர்வைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் விஜயை கதாநாயகனாக பார்த்தவர்களுக்கு, டிவியில் அவரைப் பார்க்கும்போது மறைந்த நடிகர் ரகுவரன் ஸ்டைலில் வில்லனாகத் தெரிகிறார்.
அவருடைய உண்மையான கேரக்டர் அதுதான் என்று சாடியுள்ளார்.
விஜயின் நிஜமான அரசியலும் அவரது அணுகுமுறையும் மக்களுக்குத் தெரியவரும்போது திரையில் பார்த்த பிம்பம் மாறி, அவரது உண்மையான குணாதிசயம் வெளிப்படுவதாகத் தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









