இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, குறித்த நாட்களில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.









