தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் வேதனத்தில் வேலை கொடுத்த சிறுவன்!

Sunday, 30 August 2026 - 18:05

%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82.2+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%21
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவுல் ஜோன் அஜு (Raul John Aju) என்ற 16 வயது சிறுவன், தனது இளம் வயதிலேயே புதிதாக செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிறுவனம் ஒன்றை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார்.

அவரது நிறுவனத்தில் தற்போது 15 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பணியாற்றுபவர்களில் அவரது தந்தையும் ஒருவராவார்.

தனது தந்தைக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் வேதனம் வழங்கி வரும் ரவுல், தன்னிடம் தொழில்நுட்ப அறிவு இருந்தாலும், தந்தையின் பல வருட அனுபவத்தைக் கற்றுக்கொள்வதற்காகவே அவரைத் தனது நிறுவனத்தில் பணியமர்த்தியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.