இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்ன மீதான வழக்கு: மரபணு கோரிக்கை தொடர்பில் மேன்முறையீடு

Tuesday, 01 September 2026 - 18:17

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%3A+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்ன மரபணு மாதிரி தொடர்பான தமது கோரிக்கையை நிராகரிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னதாக எடுத்த முடிவுக்கு எதிராக, முறைப்பாட்டாளரான பெண் விமானி கொழும்பு குடிசார் மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

முன்னதாக, தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்னதான் என்பதை உறுதிப்படுத்திப் பிறப்புச் சான்றிதழ் வழங்‌குமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி அந்தப் பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதற்குச் சான்றாக சாமிகவின் இரத்த மாதிரியைப் பெற்று மரபணு (DNA) பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

ஆனால், இந்தச் சான்றை வழங்குவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

அத்துடன், இந்த வழக்கை மீண்டும் ஒக்டோபர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இந்தநிலையில், தமது கோரிக்கையை நிராகரிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி மனுதாரர் மேன்முறையீடு செய்துள்ளார்.இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.