ஈரானின் கார்க் தீவு அருகே எண்ணெய் தாங்கி கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்!

Saturday, 05 September 2026 - 14:51

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
ஈரானின் கார்க் (Kharg) தீவுப் பகுதிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தக் கப்பல் அமெரிக்காவின் நான்கு ஏவுகணைத் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளதாகவும், தற்போது கப்பலில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் 'கபார் ஃபூரி' (Khabar Fouri) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதப் பகுதிகள் இந்த கார்க் தீவு ஊடாகவே செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.