அம்பிட்டியே சுமனரத்ன தேரர் நாளை வரை விளக்கமறியலில்

Monday, 07 September 2026 - 16:45

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
மட்டக்களப்பு மங்களாராம விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை நாளை (8) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மட்டக்களப்பு மங்களாராம விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு தலைமையகக் காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று, அங்கிருந்த அதிகாரிகளின் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கான விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.