ஏர் கனடா - தாய் ஏர்வேஸ் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

Wednesday, 13 August 2025 - 7:37

%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE+-+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
இலங்கையுடனும், இந்தியாவுடனும் இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், ஏர் கனடா மற்றும் தாய் ஏர்வேஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 
 
இதன்படி, கொழும்பு, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் பெங்கோக்கிற்கு தடையின்றி விமானச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
 
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஏர் கனடா மற்றும் தாய் ஏர்வேஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. 
 
இந்த புதிய ஒப்பந்தத்துக்கு அமைய, இரு விமானச் சேவைகளும் புதிய நகரங்களுக்கும் பயணத்தை முன்னெடுக்கவுள்ளன.