ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை: பிரான்ஸில் உச்சக்கட்ட வெப்பநிலை பதிவு

Thursday, 25 June 2026 - 12:52

%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%3A+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, இதுவரை இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

.இதற்கமைய, பிரான்ஸ் நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் பதிவான மிக அதிகூடிய வெப்பநிலையாக நேற்றைய தினம் (24) 41 பாகை செல்சியஸ்வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவிலும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சாதனை அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஸ்பெய்ன் நாட்டில் 1950ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிக அதிகூடிய தினசரி சராசரி வெப்பநிலை நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

உலகளாவிய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், ஐரோப்பிய பிராந்தியத்தில் இரண்டு மடங்கு அதிக வெப்பநிலை பதிவாகி வருவதாக கொப்பர்நிக்கஸ் காலநிலை கண்காணிப்பு சேவை (Copernicus Climate Change Service) சுட்டிக்காட்டியுள்ளது.