ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய சவால் - அணித் தலைவரால் அனைத்து ஐ.பி.எல். வீரர்களுக்கும் சிக்கல்

Thursday, 30 April 2026 - 16:15

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
ஐபிஎல் 2026 தொடரின் 40 ஆவது லீக் போட்டியின் போது, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் விதிமுறைகளை மீறி மின்னணு-சிகரெட் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிசிஏ மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் போது ஆடை மாற்றும் அறையில் ரியான் பராக் மின்னணு-சிகரெட் புகைத்த காட்சிகள் நேரலையில் பதிவாகி இணையத்தில் வைரலாகின.

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு முதல் மின்னணு-சிகரெட் பயன்பாடு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதுடன், ஐபிஎல் விதிகளின்படி மைதானத்தின் உட்பகுதிகளில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்ட செயலாகும்.

இந்த ஒழுக்கீனமான செயல் தொடர்பாக விசாரணை நடத்திய பிசிசிஐ, ரியான் பராக்கிற்கு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

அவரது நன்னடத்தை கணக்கில் ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மேலதிக வழிகளையும் பிசிசிஐ ஆராய்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.