தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் நெருங்கிவிட்டதாக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மனம் திறந்து பேசியுள்ளார்.
சவுதி ப்ரோ லீக் தொடரில் அல் ஆலி அணியை வீழ்த்திய பிறகு, அல் நசார் கிளப் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்த உணர்ச்சிகரமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தான் விளையாடுவது தற்போதைய தலைமுறைக்காக மட்டுமல்லாமல், கடந்த தலைமுறைக்காகவும் மற்றும் வரப்போகும் எதிர்காலத் தலைமுறைக்காகவும் தொடர்ந்து விளையாடி வருவதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தனது கால்பந்து பயணத்தின் முடிவு நெருங்கினாலும், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு போட்டியையும் தான் முழுமையாக இரசித்து விளையாடி வருவதாகவும், இந்த லீக் தொடரை வெல்வதில் தனது அணி உண்மையிலேயே ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









