நெட்டிசனின் விமர்சனத்துக்கு பார்த்தீவ் பட்டேல் பதிலடி!

Saturday, 02 May 2026 - 14:28

%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%21
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான பார்த்தீவ் பட்டேல், ஐ.பி.எல். (IPL) போட்டிகளில் ஆட்டநாயகன் விருதே வென்றதில்லை என்று சமூக வலைதளத்தில் விமர்சித்த நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

2003ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பார்த்தீவ் பட்டேல், இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 1,706 ஓட்டங்களை (Runs) எடுத்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகளுக்காக 139 போட்டிகளில் விளையாடி 2,848 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.

இந்தநிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், "13 ஐ.பி.எல். பருவங்களில் விளையாடியும் ஆட்டநாயகன் (Player of the Match) விருதை வெல்லாத வீரர் யார்?" என்று பதிவிட்டு பார்த்தீவ் பட்டேலை டெக் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பார்த்தீவ் பட்டேல், தான் 5 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளதாகக் காட்டும் புள்ளிவிவரங்களின் ஸ்கிரீன்ஷொட்டைப் பகிர்ந்து, "உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்!!" என நகைச்சுவையாக பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது பார்த்தீவ் பட்டேல், ஐ.பி.எல். 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராகப் (Batting Coach) பணியாற்றி வருகிறார். சுப்மன் கில்லின் தலைமையிலான குஜராத் அணி, இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.