இளம் வீரரிடம் எல்லை மீறிய ஆக்ரோஷம் : கைல் ஜேமிசனுக்கு கிடைத்த அதிரடித் தண்டனை

Saturday, 02 May 2026 - 16:20

%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D+%3A+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை ஒரு தகுதி இழப்புப் புள்ளியை வழங்கியுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இளம் வீரர் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறி ஆக்ரோஷமாகக் கொண்டாடியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது.

அடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 226 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷியின் விக்கெட்டை, கேய்ல் ஜேமிசன் 1.5 ஆவது பந்தில் வீழ்த்தினார்.

அந்த விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஜேமிசன் சூர்யவன்ஷிக்கு அருகில் சென்று ஆக்ரோஷமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் குற்றமாகக் கருதப்பட்டு, அவருக்கு எச்சரிக்கையும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தோல்வியடைந்த போதிலும், தொடர்ந்து நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது.