இலங்கை கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அட்டவணை வெளியீடு!

Sunday, 03 May 2026 - 15:21

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%21
இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இந்தத் தொடரில் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் , 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, டெஸ்ட் போட்டிகளுடன் சுற்றுப்பயணம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒருநாள் போட்டிகள் ஜூன் 3,6 மற்றும் 8 ஆம் திகதிகளில் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

பின்னர், ஜூன் 11, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளும் சபீனா பார்க்கில் நடைபெறவுள்ளன.

இறுதியாக, ஜூன் 25 முதல் 29 வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஜூலை 3 முதல் 7 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியும் அன்டிகுவாவில் உள்ள SVRS மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.