ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 1.65 பில்லியன் டொலருக்கு வாங்குகிறது மிட்டல் குடும்பம்!

Sunday, 03 May 2026 - 19:14

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+1.65+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் அங்கம் வகிக்கும் 'ராஜஸ்தான் ரோயல்ஸ்' (Rajasthan Royals) அணியை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி நாராயண் மிட்டல் மற்றும் அவரது மகன் ஆதித்யா மிட்டல் ஆகியோர், தொழிலதிபர் அதார் பூனவல்லாவுடன் இணைந்து வாங்குவதற்கான உறுதியான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 1.65 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, ஐபிஎல் அணி மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய தென்னாபிரிக்காவின் 'பார்ல் ராயல்ஸ்' (Paarl Royals) மற்றும் கரீபியன் பிரீமியர் லீக்கின் 'பார்படோஸ் ரோயல்ஸ்' (Barbados Royals) ஆகிய அணிகளும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ளடங்குகின்றன.

இந்த ஒப்பந்தத்தின்படி, மிட்டல் குடும்பத்தினர் சுமார் 75 சதவீத பங்குகளையும் அதார் பூனவல்லா 18 சதவீத பங்குகளையும், எஞ்சிய 7 சதவீத பங்குகளை அணியின் தற்போதைய முதன்மை உரிமையாளர் மனோஜ் படாலே உள்ளிட்ட முதலீட்டாளர்களும் தக்கவைத்துக் கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மனோஜ் படாலே தொடர்ந்தும் ஆலோசகராகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வேறொரு தரப்பினர் மேற்கொள்ளவிருந்த முயற்சியின் பின்னடைவுக்குப் பின்னர் இந்த புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இது ஐபிஎல் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் முழுமையடைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI), இந்தியப் போட்டி ஆணைக்குழு (CCI) மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு ஆகியவற்றின் ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த ஒப்பந்தம் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.