எதிர்காலத்தில் சுற்றுலா வலயங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை

Friday, 05 June 2026 - 17:23

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கையின் சுற்றுலா வலயங்களை எதிர்காலத்தில் "பூச்சிய உமிழ்வு" (Zero Emission) வலயங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, அவ்வலயங்களுக்குள் சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த மாற்றத்தை மேற்கொள்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன்களைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் பிரதான பகுதிகளில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, முதலீடுகள் மற்றும் நடைமுறைச் சாத்தியமான திட்டங்களை ஒருங்கிணைத்து இந்த உத்தியோகபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த முயற்சியானது நிலையான வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதுடன், இலங்கையின் பசுமைச் சுற்றுலாத் துறைக்கு புதிய புத்துயிரை ஊட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.