தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ நிலைமை காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழைக்கால வானிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 12 மணிநேரத்தினுள் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.