சட்டம் - ஒழுங்கு விவகாரம் : ஆட்சிக்கு எதிராக ஆயிரம் குற்றச்சாட்டுகள் கூறலாம் - முதலமைச்சர் விஜய் பதில்!

Tuesday, 23 June 2026 - 14:06

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%3A+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் - ஒழுங்கு தொடர்பில் அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சியாக இருப்பதால் தற்போதைய ஆட்சியின் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருள் பிரச்சினை தற்போது உருவாகியதல்ல என்றும், பல ஆண்டுகளாக அதனை உரிய முறையில் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கடந்த கால ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களுக்கு தற்போது தீர்வு மற்றும் நீதி கிடைத்து வருவதாகவும் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒன்பது மாதங்களாகத் தமிழகத்தில் நிரந்தர காவல்துறைத் தலைவர் (DGP) ஒருவர் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் காவல்துறை நிர்வாகம் தொடர்பான இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் தரப்புக்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன.