ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் கடும் வெப்ப அலையிலிருந்து தப்பிப்பதற்காக, பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீராடச் சென்ற 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதி நாட்களிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








