2026 உலகக் கிண்ண குரூப் 'K' போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக போர்த்துக்கல் அணி முதல் பாதிக்கு பின்னரான நேரத்தில் 4–0 என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
அத்துடன் இந்தப் போட்டியில் ரொனால்டோ வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
போட்டியின் 6-வது நிமிடத்தில் ஜாவோ கான்செலோவின் கிராஸ் மூலமாக முதல் கோலை அடித்த 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் ஆறு வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) கோல் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த போதிலும், அதற்கு முன்பாக கான்செலோ மீது ஃபவுல் செய்யப்பட்டதால் VAR சோதனையின் மூலம் அந்த கோல் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் புரூனோ பெர்னாண்டஸ் கொடுத்த பாஸ் மூலம் ரொனால்டோ தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.








