ஜோத்பூர் மத்திய சிறையில் தான் கழித்த கடினமான நாட்கள் குறித்து பொலிவுட் நடிகர் சல்மான் கான் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
"பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறைக்குச் சென்றபோது, ஒரு சிறிய அறையில் 50 முதல் 60 பேர் வரை அடைக்கப்பட்டிருந்தோம். அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது. அங்கு எப்போது பார்த்தாலும் பல்லிகள் ஓடிக்கொண்டிருக்கும்; சாக்கடை நீரும் கழிவுகளும் நிரம்பி வழியும்" எனத் தனது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
1998-ஆம் ஆண்டு 'ஹம் சாத்-சாத் ஹைன்' திரைப்படப் படப்பிடிப்பின் போது, ராஜஸ்தானின் ஜோத்பூர் அருகே சட்டவிரோதமாகக் கறுப்பு மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பில், ஜோத்பூர் மத்திய சிறையில் வெவ்வேறு காலகட்டங்களில் சல்மான் கான் மொத்தம் சுமார் 18 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






