ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு

Wednesday, 05 August 2026 - 19:51

%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+-+15+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
நடிகை ஸ்ருதி ஹாசன், தனது பெயர், புகைப்படம், உருவம், குரல் மற்றும் ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தனது அனுமதியின்றி, தனது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இணையவழி தளங்கள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது அடையாளத்தையும் ஆளுமை உரிமைகளையும் அனுமதியின்றி பயன்படுத்தியவர்களிடம் இருந்து 15 கோடி இந்திய ரூபாய் நஷ்டஈடு பெற்றுத்தருமாறும் நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.