காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!

Friday, 07 August 2026 - 6:15

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21
2025 அக்டோபர் 10ஆம் திகதியன்று "போர்நிறுத்தம்" என அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த சுமார் 300 நாட்களில், காஸாவில் குறைந்தது 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

யுனிசெப் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நல அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த 300 நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு குழந்தை தாக்குதல்களில்
கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

அத்துடன், நூற்றுக்கணக்கான குழந்தைகள் காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்கா தலைமையிலான முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் பங்களாளிகள் தமது வாக்குறுதிகளை செயலில் காட்டவேண்டும் என்று யுனிசெப் வலியுறுத்தியுள்ளது.

காஸா பிராந்திய மக்கள் தற்போது மூன்றில் ஒரு பகுதியில் மட்டுமே முடங்கியுள்ளனர்.

அவர்கள் இடிந்த கட்டிடங்கள், இடிபாடுகள் மற்றும் அகற்றப்படாத கழிவுகளுக்கு மத்தியில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று யுனிசெப் கூறியுள்ளது.

சிறுவர்கள்; தொடர்ந்து கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள், பாதுகாப்பற்ற நீர் மற்றும் சேதமடைந்த சுகாதார நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை 2023 முதல், காஸா மீதான இஸ்ரேலின் போரில் 73,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதில்,58,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், தாய், தந்தை இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்துள்ளதாக யுனிசெஃப் கூறுகிறது.