நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அண்மையில் தமிழகத்தின் பிரபல தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
குறித்த நேர்காணலில் சஞ்சய் வழங்கிய அமைதியான, தெளிவான மற்றும் நேர்த்தியான பதில்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடந்த சில நாட்களாக இந்த நேர்காணல் மற்றும் சஞ்சய் குறித்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
சஞ்சய்யிடம் அவரது திரைப்படம் தொடர்பான கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்பட்டதாகவும், அதனுடன் விஜய், தாய் சங்கீதா, தங்கை ஷாஷா உள்ளிட்ட குடும்பம் தொடர்பான சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்பட்ட சில சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தவிர்த்து, சஞ்சய் மிகவும் முதிர்ச்சியான முறையில் பதிலளித்தமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், நேர்காணலுக்கு முன்பாக கேள்விகள் தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், குடும்பம் சார்ந்த தனிப்பட்ட விடயங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
சஞ்சய்யின் எதிர்கால பயணத்திற்கு குடும்பப் பிரச்சினைகள் தாக்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவரது தாய் சங்கீதா கவனம் செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நேர்காணலில் சஞ்சய் எந்த எதிர்மறையான கருத்துக்களையும் வெளியிடாமல், மிகவும் நிதானமாகவும் அறிவார்ந்த முறையிலும் பதிலளித்தமைக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிலர் அவரது பேச்சு மற்றும் அணுகுமுறையை விஜய்யுடன் ஒப்பிட்டு கருத்துகளைப் பகிர்ந்துள்ள நிலையில், சஞ்சய்யின் இந்த முதற்கட்ட ஊடகப் பயணம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.









