முதலமைச்சர் விவகாரத்தில் சமரசமா? மன்னிப்பு கேட்ட மார்க்கண்டேயன்!

Saturday, 08 August 2026 - 11:18

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%3F+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%21
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என எச்சரிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்யிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

விஜய்யை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், 14 நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர், முதலமைச்சர் தொடர்பில் அந்த அளவுக்கு கடுமையான கருத்துகளை தெரிவித்திருக்கக் கூடாது என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமக்கு அறிவுரை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தாம் தெரிவித்த கருத்துகளுக்காக விஜய்யிடம் மன்னிப்புக் கோருவதாக மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனம் நிலவியுள்ளது.