பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!

Thursday, 13 August 2026 - 4:04

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%3A+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%21
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில், ஹைதராபாத் செல்லவிருந்த பயணி ஒருவரின் பையிலிருந்து குரங்கின் மண்டை ஓடு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லி வானூர்தி நிலையத்தில் பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட மண்டை ஓடு பரிசோதனைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.