பாரதிய ஜனதாக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் குறித்துத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்து தொடர்பில் நடிகை குஷ்பு, தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
பெண்களை அரசியல் விவாதங்களுக்குள் இழுப்பதோ அல்லது அவமதிப்பதோ எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, "அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல" என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் 'நாரி சக்தி' அதாவது பெண் சக்தி குறித்தே பேசி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சட்டப்பேரவைக்கு சென்று, 'அப்பா எங்கே? என்று தேடிக்கொண்டிருப்பவர்கள் வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யாரென்று அவர் சொல்லுவார் என்று குறிப்பிட்டிருந்த நயினார் நாகேந்திரன், இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது என்று விமர்சனம் வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்துக்களே இன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









