ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை

Thursday, 13 August 2026 - 13:50

%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து குறைந்த மட்டத்தில் காணப்படுவதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உலகளாவிய எண்ணெய் விநியோகம் தொடர்பான அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், கிடைக்கக்கூடிய எண்ணெய் கையிருப்புகள் வேகமாகக் குறைந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் பின்னணியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.60 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.28 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தில் முக்கியமான கடல்வழிப் பாதையாக உள்ள நிலையில், அங்கு நிலவும் கப்பல் போக்குவரத்து பாதிப்பு சர்வதேச எண்ணெய் சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.