அது நான் இல்லை இருந்தாலும் அதில் என்ன தவறு? - விஜய்யின் அமைச்சர் கீர்த்தனா கேள்வி

Monday, 24 August 2026 - 5:48

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%3F+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
சமூக வலைத்தளங்களில் வைரலான பெண்ணின் காணொளி ஒன்று தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.

சிற்றுந்து இருந்து நவீன உடையில் பெண் ஒருவர் இறங்கிச் செல்லும் காணொளி ஒன்று அதிகமாக இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சிற்றுந்தில் இருந்து இறங்கிச் செல்லும் அந்த பெண் தோற்றத்தில் அமைச்சர் கீர்த்தனாவை போன்று இருப்பதால், அது அமைச்சர் கீர்த்தனா என சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, “அந்த காணொளியில் இருப்பது தாம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை அது தாமாக இருந்தாலும்கூட, அதில் என்ன பிரச்சனை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களின் உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதமாக்குவது பிற்போக்குத்தனமான மனநிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது நிர்வாகம் மற்றும் கொள்கைகளை விமர்சிக்க முடியாதவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வதந்திகளை பரப்புவதாக அமைச்சர் கீர்த்தனா குற்றஞ்சாட்டியுள்ளார்.