பத்திரிகை நிழற்படக் கலைஞர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து எடுத்த காணொளி வைரல்

Friday, 21 August 2026 - 11:07

%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
உலக நிழற்பட தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் பத்திரிகை நிழற்படக் கலைஞர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே நிழற்படம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளைக் கலைநயம் மிக்க நிழற்படங்களால் உணர்த்தும் அனைத்து நிழற்படக் கலைஞர்களுக்கும் தனது 'உலக நிழற்பட நாள்' நல்வாழ்த்துகள் என்றும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின், பத்திரிகை நிழற்படக் கலைஞர்களைச் சந்தித்துக் காணொளி வெளியிட்டமை தொடர்பான விபரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.