‘வருங்கால முதலமைச்சர்’ – சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனால் பரபரப்பு

Saturday, 22 August 2026 - 12:10

%E2%80%98%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99+%E2%80%93+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நடிகர் விஜய் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டு, தேர்தலில் வெற்றி பெற்று தற்போது முதலமைச்சராகப் பதவி வகித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த மேலும் சில நடிகர்களும் அரசியல் தொடர்பான தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ராகவா லோரன்ஸ், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷின் பெயரும் இடம்பெறுவதாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது அவரைக் காண வந்த ரசிகர் ஒருவர், சிவகார்த்திகேயனை நோக்கி “வருங்கால முதலமைச்சர்” எனக் குரல் எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், தனது வாயின் மீது விரலை வைத்து அமைதியாக இருக்குமாறு ரசிகரிடம் சைகை செய்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சிவகார்த்திகேயனின் இந்தச் செயல் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.