H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!

Tuesday, 09 June 2026 - 6:23

H-1B+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+100%2C000+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21+
வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் நலன்களுக்குப் பாதகமான வெளிநாட்டவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த ஜனதிபதிக்கு அதிகாரம் உண்டு என்ற குடிவரவுச் சட்ட விதியை ட்ரம்ப் இந்த கட்டணத்தை விதித்திருந்தார்.

இந்தநிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விதிக்கப்பட்ட இந்தக் கட்டணம், சட்டவிரோதமான ஒரு வரியாகும் என பொஸ்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் தீர்ப்பளித்துள்ளார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியிருக்கும் இந்த விசாக்களுக்கான கட்டணத்தை, கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக உயர்த்தியிருந்தார்.

இதற்கு எதிராக 20 மாநிலங்களின் சட்டமா அதிபர்கள் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. "அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் சர்வதேச திறமையாளர்களை முடக்கும் ட்ரம்பின் முயற்சிக்குக் கிடைத்த வீழ்ச்சி" எனப் மனுதாரர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அதேவேளை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.