அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

Tuesday, 14 July 2026 - 14:01

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தன்னைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17-ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றிய சுரேஷ் சலே, தன்னைத் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியே இந்த மனுவைச் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.