16, 17 வயதுடையவர்களின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் : பிரித்தானியாவின் புதிய அதிரடி அறிவிப்பு

Wednesday, 15 July 2026 - 8:38

16%2C+17+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%3A+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பிரித்தானியாவில், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கு நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி வரை சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இயல்புநிலை (default) கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, Instagram, TikTok மற்றும் YouTube உள்ளிட்ட செயலிகள், குறித்த வயதுடையவர்களுக்கு இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இயல்பாக செயலிழக்குமாறு அமைக்கப்படும் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், தங்களது கணக்கு (Account) அமைப்புகளை மாற்றுவதன் மூலம், இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து பயனர்கள் விரும்பினால் விலகிக் கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.