நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரியிருந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சத் தொகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்குப் பதிலாக, ஆர்த்திக்கு மாதம் ரூ.3 இலட்சம் ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ரவி மோகன் தனது மகன்களை சந்திப்பதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பான தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.









