சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.79 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.54 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.65 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.








