ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் அல்லது வரி விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என ஈரான் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.
ஈரானிய நிர்வாகத்தில் உள்ள சிலர் சுங்கக் கட்டணம் குறித்துப் பேசி வந்தாலும், அவ்வாறான எண்ணம் இல்லை என்றே ஈரான் தங்களுக்கு உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி போருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரானின் வார்த்தைகளை விட அவர்களின் நடவடிக்கைகளையே தாம் உற்றுநோக்கி வருவதாகவும், ஈரானை முழுமையாக நம்பாமல் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் துணைத் தலைவர் வான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.









