பற்களால் சைக்கிளை (ஈருருளியை) கவ்விப் பிடித்து, முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் செய்த அசாத்திய சாதனை மதுரை திருமங்கலம் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை - திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், தனது உடல் வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்த விநோத சாதனையில் ஈடுபட்டார்.
சுமார் 35 கிலோ எடை கொண்ட இரும்பு சைக்கிளை (ஈருருளியை) தனது பற்களால் மட்டுமே கவ்வித் தூக்கியவாறு, சற்றும் தடுமாறாமல் 100 அடி தூரத்திற்கு நடந்து சென்று அவர் அசத்தியுள்ளார்.
இவரது இந்த சாதனை முயற்சியைப் பார்த்த பொதுமக்கள் கைதட்டிப் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, இது தொடர்பான காணொளியும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.









