இலங்கைக்கான புதிய சீனத் தூதராக பதவியேற்கும் வேய் ஹ_வாசியாங்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதியேற்பு

Wednesday, 12 August 2026 - 5:54

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B9_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%3A+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கைக்கான புதிய அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட சீனத் தூதராகப் நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹ_வாசியாங் (றுநi ர்ரயஒயைபெ) தனது பதவியைப் பொறுப்பேற்பதற்காக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும் பரஸ்பர நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

வானூர்தி நிலையத்தை வந்தடைந்ததும், ஊடகங்களுக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ உரையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கினால் இலங்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டமை தமக்குக் கிடைத்த பெருமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய கடல்சார் வர்த்தகம் மற்றும் பட்டுப் பாதை வழியிலான இரு நாடுகளின் வரலாற்றுத் தொடர்புகளை நினைவு கூர்ந்த அவர், 70 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆதரவு மற்றும் ஒற்றுமைக்குச் சான்றாகக் விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா தனது அண்டை நாட்டு இராஜதந்திரக் கொள்கையில் எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்தநிலையில், தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள தூதர் வேய் ஹ_வாசியாங், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.