விஜய்யின் படக்குழுவினருக்கு தொடரும் அரசுப் பதவிகள் – அடுத்தடுத்து கிடைக்கும் முக்கிய நியமனங்கள்

Tuesday, 11 August 2026 - 13:08

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அரசுப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், விஜய்க்கு நெருக்கமானவராகக் குறிப்பிடப்படுபவருமான ஜெகதீஷ் பழனிசாமி, முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

மேலும், ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, தமிழ்நாடு அரசின் திரைப்படப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரிசையில், ‘கோட்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, கோயில்களுக்கான அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் திரைப்படங்களில் பணியாற்றிய சில முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அடுத்தடுத்து அரசுப் பொறுப்புகளில் இடம்பெற்றிருப்பது, தற்போது அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.