திரைப்பட இயக்கம் கற்க வெளிநாடு செல்ல விரும்பியபோது, தனது தந்தை விஜய் முழு ஆதரவளித்ததாக அவரது மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில், தனது சினிமா பயணம் மற்றும் தந்தையின் ஆதரவு குறித்து ஜேசன் சஞ்சய் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
“நான் வெளிநாடு சென்று தனியாகத் தங்கி திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினேன். அதற்கு அப்பா சிறிதும் தயங்கவில்லை. முதலில் எனக்கு அனுமதி வழங்கியவரே அவர்தான்.
‘நீ போய் செய்... அதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்’ என்று என்னை ஊக்கப்படுத்தினார். எனது சினிமா மீதான ஆர்வத்திற்கும் பயணத்திற்கும் அவர் மிகவும் ஆதரவாக இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
தனது விருப்பத்தைப் புரிந்துகொண்டு, திரைப்படத் துறையில் பயணிக்க தந்தை விஜய் முழுமையான ஆதரவை வழங்கியதாக ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.









