மீண்டும் திரையில் விஜய் - த்ரிஷா : ‘வெளியான அதிரடி அறிவிப்பு!

Sunday, 09 August 2026 - 18:20

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE+%3A+%E2%80%98%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இயக்குநர் பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘திருப்பாச்சி’ திரைப்படம் ஒக்டோபர் 1 ஆம் திகதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாகவே மறுவெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ஒக்டோபர் 1 ஆம் திகதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பசுபதி, மல்லிகா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இயக்குநர் பேரரசுவுக்கு அறிமுகப் படமாக அமைந்த இந்த திரைப்படம், விஜய் மற்றும் த்ரிஷாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.