சிரியாவில் சுமார் 14 ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இழைக்கப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொடூர சித்திரவதைகள் மற்றும் திட்டமிட்ட கொலைகள் தொடர்பில், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு (Bashar al-Assad) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியிழந்து தற்போது ரஷ்யாவில் தலைமறைவாக வாழும் பஷார் அல்-அசாத், நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாத நிலையில் அவருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருடன் சேர்த்து, ரஷ்யாவில் தலைமறைவாக இருக்கும் அவரது சகோதரர் மஹெர் அல்-அசாத்துக்கும் (Maher al-Assad) நேரில் முன்னிலையாகாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் உள்ள அவரது உறவினரும், சிரியாவின் முன்னாள் அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவருமான ஆட்டெஃப் நஜீப்பிற்கும் (Atef Najib) மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.