General17 September 2025

ரஷ்யா - யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர நரேந்திர மோடி வழங்கிய ஆதரவுக்கு நன்றி

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ட்ரூத் சோசியலில் (truth social ) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 
 
தனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாகவும், இந்திய பிரதமராக மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் ட்ரம்ப் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர நரேந்திர மோடி வழங்கிய ஆதரவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்கு இந்தியப் பிரதமரும் பதிலளித்து, அவரது வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Related Recomands
Hiru TV News | Programmes