General22 September 2025

விமானப் பயணத்தைத் தாமதமாக்கிய எலி

கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் எலி நடமாடியதால் விமானப் பயணம் 3 மணி நேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
விமானத்தில் எலி ஒன்று இருப்பதை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக சக பயணிகளுக்கும், விமானத்தின் கடமையாற்றுபவர்களிடம் அறிவித்துள்ளார். 
 
இதையடுத்து, உடனடியாக விமானத்திலிருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கி விடப்பட்டனர். 
 
பின்னர், விமானத்தின் உள்ளே சென்ற பணியாளர்கள் நீண்ட முயற்சிக்குப் பின்னர் குறித்த எலியைப் பிடித்துள்ளனர். 
 
இதன் காரணமாக 3 மணி நேரம் தாமதமாக விமானம் கான்பூரிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. 
 
குறித்த சம்பவத்தினால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related Recomands
Hiru TV News | Programmes