General22 September 2025

ஜனாதிபதி அனுர ஜப்பானுக்குப் பயணம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 
 
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இந்த பயணத்தின் போது உச்சி மாநாடுகளில் பங்கேற்கவுள்ளதுடன் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஜப்பானிய பிரதமருடன் கலந்துரையாடவுள்ளார். 
 
இலங்கையின் வளர்ந்துவரும் பொருளாதாரத் தேவைகளை மையமாகக் கொண்டு டோக்கியோவில் நடைபெறும் ஜப்பானிய வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் வணிக மன்றத்திலும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
Related Recomands
Hiru TV News | Programmes