General23 September 2025

தாம் ஈட்டிய பெறுமதிவாய்ந்த சொத்து குறித்து மஹிந்தவின் பேஸ்புக் பதிவு

தாம் சேர்த்துள்ள “மக்கள்” என்ற சொத்து மற்ற எல்லா சொத்துக்களையும் விடவும் பெறுமதி வாய்ந்தது எனவும் பல மக்களை சம்பாதித்துள்ளமையே தமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் கார்ல்டன் இல்லத்தில் தமது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ தம்மை சந்திக்க வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

“லெப்டினன்ட் கேணலாகவும், பாதுகாப்பு செயலாளராகவும், பின்னர் உயிர்களை காப்பாற்றிய ஜனாதிபதியாகவும் இருந்த கோட்டாபயவால் நான் கௌரவிக்கப்படுகிறேன். அவர் எப்போதும் மக்களை பாதுகாத்தார் என்பதில் எனக்கு பெருமை” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச குறித்து நினைவுகூர்ந்த அவர், “ மூன்று தசாப்தங்களுக்கு மேல், நாட்டை அழித்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை என் வாழ்நாளின் மிக மகிழ்ச்சியான செய்தியாகும். அந்த தருணத்தில் விமல் எனக்கு அருகில் இருந்தார். அந்த மகிழ்ச்சியை நாங்கள் புன்னகையுடன் பகிர்ந்து கொண்டோம்” என்று குறிப்பிட்டார்.

அதேநேரம், கடந்த சில நாட்களாக கார்ல்டன் இல்லத்துக்கு வரும் மக்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்ததாகவும், மக்களின் புன்னகை தான் உண்மையான சொத்து எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
Related Recomands
Hiru TV News | Programmes